கிச்சன் கீர்த்தனா : சேலம் பிச்சுப்போட்ட கோழி வறுவல்

தமிழகம்

சேலத்து மக்களின் உணவுப் பழக்க வழக்கம் மிகவும் சுவாரஸ்யமானது. ருசியான பதார்த்தங்களை கொண்டாடும் சேலம் மக்களின் அன்றாட வாழ்வில் இந்த சேலம் பிச்சுப்போட்ட கோழி வறுவலும் இடம்பிடித்துள்ளது. இதை நீங்களும் செய்து வீட்டிலுள்ளவர்களை அசத்தலாம்.

என்ன தேவை?

கோழி – முக்கால் கிலோ
இஞ்சி-பூண்டு விழுது – ஒன்றரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை  டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
சோம்பு – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 2
தோலுரித்த சின்ன வெங்காயம் – 100 கிராம்
பச்சை மிளகாய் – 2
மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

கோழியை சுத்தம் செய்து  விருப்பப்பட்ட வடிவில் நறுக்கிக் கொள்ளவும். இத்துடன் இஞ்சி – பூண்டு விழுது, உப்பு, மஞ்சள்தூள்  ஆகியவற்றைச் சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் வேகவைத்த சிக்கன் சேர்த்து வதக்கி மல்லித்தூள் (தனியாத்தூள்), உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக வதக்கி மசாலா வாசனை போனதும் மிளகுத்தூள் தூவி இறக்கிப் பரிமாறவும்.

கொங்கு நாட்டுக் கோழிக்குழம்பு!

கிச்சன் கீர்த்தனா : நாட்டுக்கோழி தண்ணிக்குழம்பு

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.