சேலம் ஆர்ஆர் பிரியாணி ஹோட்டல் ஊழியர்கள் மீது தாக்குதல்!

தமிழகம்

சேலம் ஆர்ஆர் பிரியாணி ஹோட்டலில் ரவுடிகள் புகுந்து ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம், சுப்ரமணிய நகர் பகுதியில் ஆர்ஆர் பிரியாணி ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலுக்கு நேற்று மாலை மது அருந்திய நிலையில் முதியவர் ஒருவர் சென்றுள்ளார். அவர் பிரியாணி சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் ஹோட்டல் ஊழியர்களை தகாத வார்த்தைகளில் பேசி  ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஊழியர்கள் அந்த நபரை ஹோட்டலில் இருந்து வெளியேற்றினர்.

அந்த நபர் அங்கிருந்து சென்ற சிறிது நேரத்தில், ஹோட்டலுக்கு வந்த ஒரு கும்பல் ஹோட்டல் ஊழியர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இந்த தாக்குதல் சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

அந்த ரவுடி கும்பலுக்கு ஆதரவாக அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்த திமுக மாணவரணி பகுதி செயலாளர் தாமோதரன் என்பவர் வந்து, ஹோட்டல் நிர்வாகத்திடம் வாக்குவாதம் நடத்தியதாக உரிமையாளர் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூரமங்கலம் காவல் நிலையத்தினர், மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர், நடந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் சிசிடிவி காட்சிகளை கொண்டு, தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருகின்றனர்.

இது குறித்து ஹோட்டல் உரிமையாளர் விஜயவெங்கடேஸ்வரன் கூறும்போது, “சேலம் நகருக்குள் இதுபோன்ற ரவுடிகள் அட்டகாசம் அச்சத்தை ஏற்படுத்துகிறது. ரவுடிசத்தை வன்மையாக கண்டிக்கிறோம். ரவுடிகளுக்கு ஆதரவாக திமுக மாணவரணி பகுதி செயலாளர் தாமோதரன் செயல்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

செல்வம்

கிச்சன் கீர்த்தனா: சிக்கன் புளி ரசம்!

சிலிண்டர் விலை குறைப்பு… பாஜகவின் தேர்தல் பாசம்: காங்கிரஸ் விமர்சனம்!

+1
0
+1
5
+1
3
+1
7
+1
3
+1
4
+1
3

3 thoughts on “சேலம் ஆர்ஆர் பிரியாணி ஹோட்டல் ஊழியர்கள் மீது தாக்குதல்!

  1. அந்த ஊதா சட்டைக்காரர் சட்டையை கிழித்து விட்டு வந்து நிக்கிறாரு மாறி தோணுது

  2. TN citizens are used for freebies last 55 years and they want free biryani also.
    Govt can serve free biryani packets in ration shop.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *