தமிழ்நாட்டின் அதிக வெப்பநிலை பதிவான இரண்டு மாவட்டங்கள் குறித்து, வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் இன்று (மார்ச் 6) வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இன்று தொடங்கி வருகின்ற 11-ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இன்றும், நாளையும் (மார்ச் 7) தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
ஈரப்பதமான காற்று மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக தமிழ்நாட்டில் அசௌகரியமான வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு ஏதுமில்லை அதேபோல மீனவர்களுக்கான எச்சரிக்கையும் எதுவுமில்லை”, என தெரிவித்துள்ளது.
இதேபோல தமிழ்நாட்டில் வெயில் அதிகம் பதிவாகியுள்ள இடங்கள் குறித்தும் வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அந்தவகையில் ஈரோடு, சேலம் மாவட்டங்கள் தலா 39.2 டிகிரி செல்சியஸ் உடன் முதல் மற்றும் இரண்டாவது இடங்களை பிடித்துள்ளன.
வட தமிழக மாவட்டங்கள்: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர்.
தென் தமிழக மாவட்டங்கள்: ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை.
உள் தமிழக மாவட்டங்கள்: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, கள்ளக்குறிச்சி.
வட தமிழக உள் மாவட்டங்கள்: வேலூர், திருப்பத்தூர். ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர்.
தென் தமிழக உள் மாவட்டங்கள்: சிவகங்கை, விருதுநகர். தேனி, திண்டுக்கல், மதுரை. தென்காசி.
கடலோர தமிழக மாவட்டங்கள்: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி.
வட தமிழக கடலோர மாவட்டங்கள்: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை.
தென் தமிழக கடலோர மாவட்டங்கள்: ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி.
டெல்டா மாவட்டங்கள்: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்: நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
காதலாட… காதலாட… அஜித் – ஷாலினி வைரல் போட்டோ..!
ராமர் குறித்த பேச்சு: ஆ.ராசாவுக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் கண்டனம்!