அதிநவீன ஐஸ்கிரீம் தொழிற்சாலை: முதல்வர் திறப்பு!

தமிழகம்

சேலம் பால் பண்ணை வளாகத்தில் ரூ.12.26 கோடி செலவில் நாள் ஒன்றுக்கு 6000 லிட்டர் உற்பத்தித் திறன் கொண்ட அதிநவீன தொழில் நுட்பத்தில் நிறுவப்பட்டுள்ள ஐஸ்கிரீம் தொழிற்சாலையை தமிழக முதல்வர் இன்று (டிசம்பர் 13) திறந்து வைத்தார்.

ஆவின் நிறுவனம் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, 30 லட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது.

மேலும், ஆவின் பங்களிப்பை அதிகப்படுத்தும் வகையில், கூடுதல் லாபம் ஈட்டி பால் உற்பத்தியாளர்களின் நலன் பேண பல்வேறு தயாரிப்புகளிலும் ஈடுபட்டு விற்பனை செய்து வருகிறது.

அந்த வகையில், ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் உப பொருட்களான நெய், பால்பவுடர், பனீர், வெண்ணெய், பால்கோவா, தயிர், மோர், லஸ்ஸி, யோகர்ட்,

நறுமணப் பால் வகைகள், இனிப்புகள், ஐஸ்கிரீம், குல்பி, சாக்லேட் மற்றும் குக்கீஸ் உள்ளிட்டவைகளை விநியோகம் செய்து லாபம் ஈட்டி வருகின்றது.

அம்பத்தூர் பால் உபபொருட்கள் பண்ணையில் நாள் ஒன்றுக்கு 15,000 லிட்டர் ஐஸ்கிரீம் உற்பத்தி திறனுடன் சுமார் 84 பால் உபபொருட்கள், 146 வகைகளில் தயாரித்து அனைத்து மாவட்டங்களில் உள்ள நுகர்வோர்களுக்கு விநியோகம் செய்து வருகின்றது.

மதுரையில் நாள் ஒன்றுக்கு 30,000 லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலை கடந்த மார்ச் மாதம் முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது.

salem aavin icecream parlour launch in stalin

இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 13) தலைமைச் செயலகத்தில்,

ஆவின் நிறுவனத்தின் சார்பில் கோவை, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் பயன்பெறும் வகையில்,

சேலம் பால் பண்ணை வளாகத்தில் ரூ.12.26 கோடி செலவில் நாள் ஒன்றுக்கு 6000 லிட்டர் உற்பத்தித் திறன் கொண்ட அதிநவீன தொழில் நுட்பத்தில் நிறுவப்பட்டுள்ள ஐஸ்கிரீம் தொழிற்சாலையை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இப்புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலை வாயிலாக, 50 மி.லி., 100 மி.லி., 500 மி.லி., 1 லிட்டர் அளவுகளிலும் மற்றும் நுகர்வோர்களுக்கு தேவைக்கேற்ற அளவுகளிலும் ஐஸ்கிரீம் சிப்பமிடும் வசதிகளுடன்,

பல்வேறு வகை சுவைகளில் கோன் ஐஸ்கிரீம் மற்றும் கப் ஐஸ்கிரீம் ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டு,

அவை அனைத்து மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களின் மூலம் நுகர்வோர்களுக்கு தரமாகவும் தடையின்றியும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெ.பிரகாஷ்

ராவல்பிண்டி மைதானம்: அபாய நிலைக்கு தள்ளிய ஐசிசி

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் செக் வைத்த உச்ச நீதிமன்றம்!

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *