உயரும் மதுபானங்களின் விலை!
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விற்பனை விலை பிப்ரவரி முதல் உயர்கிறது என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி மாதம் முதல் மதுபானங்களின் விலையை உயர்த்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியான நிலையில் இன்று (ஜனவரி 29) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது 01.02.2024 தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது.
எனவே, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10/- உயர்த்தப்பட்டுள்ளது. 180 மி.லி. அளவு கொண்ட உயர்தர ரக மதுபானங்கள் விலை ரூ.20/- உயர்த்தப்பட்டுள்ளது.
650 மி.லி. அளவு கொண்ட பீர் வகைகளின் விலை ரூ.10/-உயர்த்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட விலை உயர்வின் அடிப்படையில் 375 மிலி., 750 மிலி., 1000 மிலி கொள்ளளவில் விற்கப்படும் மதுபான ரகங்களும் மற்றும் 325 மிலி., 500மிலி., கொள்ளளவுகளில் விற்கப்படும் பீர் வகைகளும் அந்தந்த ரகத்திற்கும் மற்றும் கொள்ளளவுக்கும் ஏற்றவாறு விலை உயர்த்தப்பட்டு விற்கப்படும்” என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
மோசடி புகார்: MYV3Ads நிறுவனத்திற்கு ஆதரவாக கூட்டம் திரண்டது எப்படி?
கோயம்பேட்டில் லுலு மால்… வதந்தியா? உண்மையா? : அரசு விளக்கம்!