கோவிலில் தரமற்ற பிரசாதங்களை விற்பனை செய்த ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ததில் தவறு இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 20) உறுதி செய்துள்ளது.
சென்னை திருவொற்றியூரில் உள்ள தியாகராஜா சுவாமி கோவிலில், தரம் குறைந்த கெட்டுப்போன பிரசாதங்களை விற்பனை செய்வதாக பக்தர்கள் புகாரளித்தனர்.
இந்த புகாரையடுத்து, பிரசாதம் விற்பனை செய்ய சீனிவாசன் என்பவருக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து அறநிலையத்துறை கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.
இந்நிலையில் அறநிலையத்துறை உத்தரவை எதிர்த்து சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவின் மீதான விசாரணை இன்று (ஏப்ரல் 20) சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “பிரசாதம் ஆய்வு செய்யப்பட்டு தரமற்றவை என தெரியவந்ததை அடுத்தே அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால், அதில் தலையிட வேண்டியதில்லை.
அனுமதியை ரத்து செய்த இந்து சமய அறநிலையத்துறையின் உத்தரவில் தவறில்லை” என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நேற்றே ஏன் கேட்கவில்லை? தமிழிசைக்கு கி. வீரமணி கேள்வி!
அரண்மனை – 4, ஸ்டார் படங்கள் தள்ளிப்போனதன் பின்னணி என்ன?