saidapet petrol bunk accident

மேற்கூரை விபத்து: சைதாப்பேட்டை பெட்ரோல் பங்க்கிற்கு சீல்!

தமிழகம்

சென்னை சைதாப்பேட்டை இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் பெட்ரோல் பங்க்கிற்கு மாநகராட்சி அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர்.

நேற்று மாலை சென்னையின் பல பகுதிகளில் மழை பெய்தது. சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க்கில் சில வாகன ஓட்டிகள் மழைக்காக ஒதுங்கியிருந்தனர். அப்போது பெட்ரோல் பங்க்கின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் இடிபாடுகளில் சிக்கினர். இரு சக்கர வாகங்கள் நொறுங்கி சேதமானது. விபத்தில் காயமடைந்த நபர்களை மீட்டு தீயணைப்புத்துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த மதுராந்தகம் முதுகரையை சேர்ந்த பெட்ரோல் பங்க் ஊழியர் கந்தசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து விபத்து நடந்த இடத்திற்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக சைதாப்பேட்டை காவல்துறை பெட்ரோல் பங்க் உரிமையாளர் அசோக், மேலாளர் வினோத் ஆகியோர் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணம் விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இன்று காலை இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க்கிற்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். தொடர்ந்து பெட்ரோல் பங்க்கில் என்னென்ன சேதங்கள் ஏற்பட்டுள்ளது அதன் மதிப்பு எவ்வளவு என்ற விவரங்களை இந்தியன் ஆயில் அதிகாரிகள் மதிப்பிட்டு வருகின்றனர்.

செல்வம்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

நடிகர் சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்ட “சூப்பர் ஸ்டார்”

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு ஆளுநர், எடப்பாடி அஞ்சலி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0