அரசு பள்ளி மாணவர்கள் மத்தியில் ஆன்மீக சொற்பொழிவாற்றிய, மகா விஷ்ணுவுக்கு செப்டம்பர் 20-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.
பரம்பொருள் அறக்கட்டளையைச் சேர்ந்த மகா விஷ்ணு, சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவாற்றியபோது, அதை தட்டிக்கேட்ட ஆசிரியர் சங்கரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில், அனைத்து உலக மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று (செப்டம்பர் 6) சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மகாவிஷ்ணு மீது புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில், மகா விஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்தநிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து மகாவிஷ்ணு நேற்று ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில், நாளை (இன்று) மதியம் சென்னை விமான நிலையத்துக்கு வருவேன். இந்த சர்ச்சை குறித்து விளக்கமளிப்பேன் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், இன்று மதியம் சென்னை விமான நிலையம் வந்த மகா விஷ்ணுவை சைதாப்பேட்டை உதவி காவல் ஆணையர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நீதிமன்றங்கள் விடுமுறை என்பதால், சென்னை எழும்பூர் நீதிமன்ற குடியிருப்பில் சைதை நீதிமன்ற நீதிபதி முன்பாக மகா விஷ்ணுவை போலீசார் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து மகா விஷ்ணுவை செப்டம்பர் 20-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மகா விஷ்ணு ஆன்மீக கிளாஸ்… பள்ளி மேலாண்மைக் குழு விளக்கம்!
சென்னையில் பிஸ்கட் விநாயகர்: கிருஷ்ணகிரியில் இந்துக்களுக்கு விருந்து கொடுத்த இஸ்லாமியர்கள்!