காலா பாணி நாவலை எழுதிய எழுத்தாளர் மு. ராஜேந்திரனுக்கு சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
காளையார்கோவில் போரை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம் காலா பாணி ‘நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை’.
மு. ராஜேந்திரன் ஏற்கனவே எழுதிய 1801 என்ற நாவலின் தொடர்ச்சியாக அல்லது ஒரு பகுதியாகத்தான் காலா பாணி நாவல் எழுதப்பட்டுள்ளது.
200 ஆண்டுகளுக்கு முன் சிவகங்கை மன்னரும் நாட்டின் முதல் புரட்சித் திலகம் வேலு நாச்சியாரின் மருமகனுமான வேங்கை பெரிய உடையணத் தேவன் மற்றும் அவர் கூட்டாளிகள் 72 பேர் நாடு கடத்தப்பட்ட கதைதான் இந்த காலா பாணி நாவல்.
எழுத்தாளர் மு. ராஜேந்திரன் நாவல் மட்டுமல்லாது சிறுகதை, கட்டுரை, பயண நூல், ஆய்வு நூல் எனப் பல நூல்களை எழுதியுள்ளார்.
இவர் தன்னுடைய 1801 என்ற நாவலுக்காக 4 விருதுகளையும் வரகரை ஒரு வம்சத்தின் வரலாறு நூலுக்காக 2 விருதுகளையும் பாண்டியர் காலச் செப்பேடுகள் நூலுக்காக 2 விருதுகளையும் சோழர் கால செப்பேடுகள் என்ற நூலுக்காக 3 விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
மீண்டும் ஊரடங்கு?: பிரபல டாக்டர் ராமசுப்ரமணியன் விளக்கம்!
ஜேஇஇ தேர்வில் சிக்கல்: பள்ளிக்கல்வித்துறை சொன்ன ஆறுதல்!