சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று (மார்ச் 26) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு, மண்டல விளக்கு பூஜை போல பங்குனி உத்திர திருவிழாவும் புகழ்பெற்றது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தந்து ஐயப்பனை தரிசிப்பார்கள்.

இந்த ஆண்டிற்கான பங்குனி உத்திர திருவிழா நாளை (மார்ச் 27) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
நாளை தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் பங்குனி உத்திர திருவிழாவிற்கான கொடி ஏற்றப்படுகிறது. தொடர்ந்து 10 நாட்கள் விழா சிறப்பாக நடைபெறும்.
ஏப்ரல் 5-ஆம் தேதி பம்பையில் ஆராட்டு விழா நடைபெற்று அன்று மாலையுடன் பங்குனி உத்திர திருவிழா நிறைவடைய உள்ளது.
ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
செல்வம்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
ராகுல் தகுதி நீக்கம்: இன்று காங்கிரஸ் போராட்டம்!