உலக அளவில் பிரசித்தி பெற்ற சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்கு பின்னர் சபரிமலை ஐயப்பன் கோவில் பிப் 12ல் மாசிமாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பிப்13 முதல்பிப் 17வரை ஐந்து நாட்கள் ஐயப்பனுக்கு பூஜைகள் நடைபெறும்.
பக்தர்கள் சபரிமலை செல்ல ஆன்லைன் மூலமே முன்பதிவு செய்து செல்லமுடியும். இன்றுமுதல் முன்பதிவு துவங்கி நடந்து வருகிறது.
மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை மீண்டும் வருகிற 12-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டதும் கோவில் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி தீபம் ஏற்றுகிறார்.
ஐயப்பனின் தவகோலம் களைந்து நெய் ஆழியில் தீபமேற்றி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
வேறு பூஜைகள் ஏதுமின்றி இரவு நடை அடைக்கப்பட்டு மறுநாள் காலை 5 மணிக்கு நடை திறந்ததும் நெய் அபிஷேகம் மற்றும் பூஜைகள் துவங்கி நடைபெற உள்ளன.
வருகிற 17-ந் தேதி வரை அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும்.
17-ந் தேதி இரவு 7 மணிக்கு படிபூஜை முடிந்ததும் 10 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.
சபரிமலை கோவில் நடை திறக்கப்படுவதை முன்னிட்டு ஆன்லைன் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது, நிலக்கல்லில் தற்காலிக உடனடி முன்பதிவு இருக்கும்.
பத்தனம்திட்டா செங்கன்னூர் திருவனந்தபுரத்தில் இருந்து பம்பைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
நேரு பெயரைப் போட என்ன வெட்கம்?: காங்கிரஸுக்கு மோடி கேள்வி!
பார்டர் கவாஸ்கர் டிராபி : ரோகித் சர்மா அரைசதம்… திணறும் ஆஸ்திரேலியா
100 பில்லியன் டாலரை இழந்த கூகுள்: செய்த தவறு என்ன?