மண்டல மற்றும் மகர விளக்கு சீசன் நிறைவடைந்ததை அடுத்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜனவரி 20) நடை சாத்தப்பட்டது.
கடந்த நவம்பர் மாதம் 16-ஆம் தேதி மண்டல மற்றும் மகர விளக்கு திருவிழாவுக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டது. டிசம்பர் 27-ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து நடை சாத்தப்பட்டு டிசம்பர் 30-ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு நேற்று இரவு வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இரவு 9 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டது. மாணிக்கப்புரம் கோவில் சன்னதியில் இறுதி நிகழ்வாக பரிபூஜை நடைபெற்றது.
இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவிதாங்கூர் மன்னர் குடும்ப பிரதிநிதிகள், பந்தளம் அரண்மனை குடும்ப பிரதிநிதிகள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் மட்டும் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து இன்று காலை 7 மணி அளவில் நடை சாத்தப்பட்டு தேவஸ்தான அதிகாரி கிருஷ்ணகுமாரிடம் சாவி ஒப்படைக்கப்பட்டது. கோவிலில் விழாவுக்காக எடுத்து வரப்பட்ட திருவாபரணங்கள் பந்தளம் அரண்மனைக்கு மீண்டும் எடுத்து செல்லப்பட்டது. இந்த ஆண்டு சுமார் 50 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
செல்வம்
வேலைவாய்ப்பு : சென்னை விமான நிலையத்தில் பணி!
சென்னை பள்ளி அருகே 8 கிலோ கஞ்சா சாக்லேட்!
ஈரோடு கிழக்கு தேர்தலில் அதிமுக போட்டி: ஜி.கே.வாசன் அறிவிப்பு!