சபரிமலையில் உள்ள புனித நதியான பம்பையில் டைபாய்டு, மலேரியா போன்ற நோய்களை ஏற்படுத்தும் ‘கோலிபார்ம்’ பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் ஐயப்ப பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தற்போது நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் அங்குள்ள பம்பை ஆற்றில் புனித நீராடுவது வழக்கம். அதன்படி, பல்வேறு இடங்களில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்கள் பம்பை ஆற்றில் அனைத்து பகுதிகளிலும் புனித நீராடி வருகின்றனர்.
இந்த நிலையில், பம்பை நதியில் ‘கோலிபார்ம்’ பாக்டீரியாக்கள் அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையின்போது பம்பை நதியில் வாரத்துக்கு ஒருமுறை கோலிபார்ம் பாக்டீரியாக்களின் அளவு பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் மொத்த கோலிபார்ம் அளவு பரிசோதிக்கப்படுகிறது.
இதில் கோலிபார்ம் என்பது மொத்த பாக்டீரியாக்களின் தொகுப்பாகும். மொத்த கோலிபார்மின் அளவு 500-க்கு மேல் இருந்தால் குளிக்க உபயோகிக்க முடியாது. ஆனால், பம்பை நதியில் கோலிபார்ம் பாக்டீரியாக்களின் அளவு 6000-க்கும் மேல் கடந்துள்ளது.
பம்பை நதியில் சோப்பு, ஷாம்பூ தேய்த்துக் குளிப்பது, இயற்கை உபாதைகளைக் கழிப்பது, உள்ளாடைகள், வேட்டிகளைத் துவைப்பது, பழைய ஆடைகளை நீரில் வீசுவது, காய்ந்த மாலைகளைக் கழற்றி வீசிவது, எச்சில் இலைகளைப் போடுவது, மீதமிருக்கும் உணவுகளைக் கொட்டுவது,
என அந்தத் தூய்மையான நதியை சாக்கடைபோல மாற்றி வருவதே பாக்டீரியாக்கள் அதிகரிப்பதற்கான காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
கோலிபார்ம் பாக்டீரியாக்கள் நிறைந்த தண்ணீரில் குளித்தால் டைபாய்டு, மலேரியா போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐயப்ப பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-ராஜ்
பேச்சுவார்த்தை நடத்த தயார்… ஆனால், உக்ரைனுக்கு புதின் விதித்த நிபந்தனை!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா : சோயா சங்க்ஸ் (Chunks) பக்கோடா