மகரவிளக்கு மற்றும் மண்டல சீசன் பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (நவம்பர் 16) நடை திறக்கப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காலம் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு மண்டல, மகர விளக்கு பூஜைக்காக மாலை 4.50 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஸ் மோகனரு நடையை திறந்து வைத்து தீபம் ஏற்றினார். இரவு 7 மணிக்கு தீபாராதனை நடைபெற உள்ளது. சாமி தரினம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் சன்னிதானத்தில் திரண்டுள்ளனர்.
மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு ஐயப்பன் கோவிலில் அதிகாலை 3.30 மணி முதல் மதியம் 12 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரையும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 41 நாட்கள் மண்டல பூஜைக்கு பிறகு டிசம்பர் 27-ஆம் தேதி நடை அடைக்கப்படும். மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்படும். ஜனவரி 15-ஆம் தேதி மகர ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.
மகர, மண்டல சீசன் பூஜையை முன்னிட்டு சுழற்சி முறையில் 13,500 காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். 60-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. கார் பார்க்கிங் கட்டணம் பாஸ்ட் டிராக் மூலம் வசூலிக்கப்பட உள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
விவசாயிகள் மீது குண்டாஸ்: தலைவர்கள் கண்டனம்!
பத்து மசோதாக்களை திருப்பி அனுப்பிய ஆளுநர்… சிறப்பு சட்டமன்றம் கூடுகிறது!