S.vaithiyanathan has appointed

உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியானார் எஸ்.வைத்தியநாதன்

தமிழகம்

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி சென்னை பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த முனீஷ்வர்நாத் பண்டாரி பணி ஓய்வு பெற்றார். இதனையடுத்து, அடுத்த பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட டி.ராஜா கடந்த 8 மாத காலம் பதவி வகித்து வந்தார்.

அவருடைய பதவிக் காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அடுத்த மூத்த நீதிபதியாக உள்ள எஸ்.வைத்தியநாதன் பொறுப்பு தலைமை நீதிபதியாக குடியரசுத்தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவையில் பிறந்த எஸ்.வைத்தியநாதன் சென்னையில் பள்ளிப் படிப்பையும் பட்டப்படிப்பையும் (பி.ஏ பொருளாதாரம்) நிறைவு செய்தார். 1982-85-ல் டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பு பயின்றார். 1986 இல் தனிநபர் மேலாண்மை, தொழிலாளர் நலன் மற்றும் தொழில்துறை உறவுகளில் முதுகலை டிப்ளமோ படித்தார்.

1986-ல் ஆகஸ்ட் 27 முதல் வழக்கறிஞராக தனது பணியைத் தொடர்ந்தார். தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 25 அன்று சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட எஸ்.வைத்தியநாதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

தொடர்ந்து நீதித்துறையில் பணியாற்றி வந்த எஸ்.வைத்தியநாதனை தற்போது சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.

மோனிஷா

எடப்பாடி ஒரு நாள் கூட நிம்மதியாக இருக்க முடியாது’: தங்கம் தென்னரசு எச்சரிக்கை!

’பிரதமர் தான் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைப்பார்’: அமித்ஷா உறுதி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *