Rural Development Department employees strike

ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பணிகள் முடங்கின!

தமிழக ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் நேற்று (செப்டம்பர் 13) முதல் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நேரத்தில் நிறுத்தப் போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் பொதுமக்களுக்கான பணிகள் முடங்கின.

தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல் ஊராட்சி செயலர்களுக்கும் தேர்வு நிலை, சிறப்பு நிலை உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும். கணினி உதவியாளர்களை பணிவரன்முறை படுத்த வேண்டும். உதவி பொறியாளர் மற்றும் பணி மேற்பார்வையாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். தேவையற்ற ஆய்வுகளை கைவிட்டு, இடையூறின்றி பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோாிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சார்பில் வேலை நிறுத்தம் நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று (செப்டம்பர் 13) ஊரக வளர்ச்சி துறை அலுவலக ஊழியர்கள் அனைவரும் மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒன்றிய பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் பொதுமக்களுக்கான பணிகள் முடங்கின.

மேலும் பொதுமக்களுக்கான அத்தியாவசிய பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்ட பணிகள், தனிநபர் அரசு திட்ட பணிகள் நடைபெறவில்லை. இதனால் அலுவலகம் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் அலுவலகத்துக்கு வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

கொரடாச்சேரியில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் 60- க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. ஊழியர்கள் இல்லாமல் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. அலுவலகத்தில் அனைத்து இருக்கைகளும் காலியாக இருந்தன. இதனால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. போராட்டத்தை முன்னிட்டு இன்று (செப்டம்பர் 14) அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

வருகிற 19ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாவட்ட தலைநகரில் மறியல் போராட்டமும், 22ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சென்னை ஊரக வளர்ச்சி துறை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்

ரஷ்யாவுக்கு முழுமையான ஆதரவு: வட கொரிய அதிபர் கிம்

அம்பேத்கர் குறித்து அவதூறு பேச்சு: ஆர்.பி.வி.எஸ் மணியன் கைது!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts