இலவச கட்டாய கல்வி திட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு இன்று (ஏப்ரல் 22) தொடங்கியது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில், இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி 25 சதவீத இடங்களில் ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். அதன்படி, தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் 1.10 லட்சம் இடங்கள் உள்ளன.
இதற்காக தமிழ்நாடு அரசால் ஒவ்வொரு ஆண்டும் ரூ.400 கோடி நிதி தனியார் பள்ளிகளுக்காக ஒதுக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் எல்.கே.ஜி முதல் 8ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம். தமிழகத்தில் 2013-ஆம் ஆண்டு அமலான இந்த திட்டத்தின்கீழ் இதுவரை 4.60 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
இந்நிலையில் வரும் 2024-25ஆம் கல்வியாண்டிற்கான இலவச கட்டாய கல்வித் திட்டம் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப்பதிவு இன்று (ஏப்ரல் 22) தொடங்கியுள்ளது.
இன்று தொடங்கும் இந்த விண்ணப்பப்பதிவு மே 20ஆம் தேதி வரை நடைபெறும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்:
- எல்.கே.ஜி. வகுப்பில் சேர்வதற்கு குழந்தைகள் 2020 ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 2021 ஜூலை 31ஆம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.
- முதலாம் வகுப்பில் சேர்வதற்கு 2018 ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 2019 ஜூலை 1ஆம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.
- பெற்றோர்கள் தங்களின் வீடுகளில் இருந்து 1 கிலோ மீட்டருக்கு உட்பட்டு அமைந்திருக்கக் கூடிய தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
- பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கும் குறைவாக உள்ள குழந்தைகள், வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகள் உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்
திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி:
இலவச கட்டாய கல்வி திட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு https://rte.tnschools.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப்பதிவு முடிந்ததும் பெற்றோரின் கைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Ghilli: திரிஷா கதாபாத்திரத்த ‘மிஸ்’ பண்ண பிரபலம்… யாருன்னு பாருங்க!
‘டிடி நியூஸ்’… காவிமயமாக்க திட்டமா? – ஸ்டாலினுக்கு தமிழிசை பதில்!