ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு : காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published On:

| By christopher

RSS march: High Court orders to the police!

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டங்கள் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை நடத்தி கொள்ளலாம் என சென்னை உயர் நீதிமன்றம் இன்று (அக்டோபர் 1) அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக் கூடாது என காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் 6 ம் தேதி 58 இடங்களில் அணி வகுப்பு நடத்த அனுமதிக்கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் அதன் நிர்வாகிகள் கார்த்திகேயன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, 58 இடங்களில் அனுமதி கேட்ட நிலையில் 52 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மாங்காடு, கொரட்டூர் உள்ளிட்ட 6 இடங்களில் பள்ளி நிர்வாகத்தினர் அனுமதி அளிக்காததால் அணிவகுப்புக்கு அனுமதிக்கவில்லை எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு, தனியார் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு கூட்டம் ஏன் நடத்த கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதி, தனியார் பள்ளி நிர்வாகம் அனுமதிக்கும் பட்சத்தில் காவல்துறை அனுமதி மறுப்பது ஏன் என வினவினார்.

தொடர்ந்து அவர் வழங்கிய தீர்ப்பில், ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு புதிய நிபந்தனைகளை காவல்துறை விதிக்கக் கூடாது.

தமிழகம் முழுவதும் மாலை 3 மணி முதல் இரவு 7 மணிக்குள் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்தி கொள்ளலாம்.

குறிப்பிட்ட மதத்தினர் வாழும் பகுதி, எதிர்கொள்கை உடைய நிலைப்பாடு கொண்ட மக்கள் வாழும் பகுதி என கூறி ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக் கூடாது.

ஏற்கெனவே கடந்த ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் எஞ்சிய 6 இடங்களில் அணிவகுப்புக்கு காவல்துறை அனுமதி வழங்க வேண்டும்” என நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.

கிறிஸ்டோபர் ஜெமா

ஜாபர் சேட் வழக்கு : உயர்நீதிமன்ற நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

காந்தி மண்டபத்தில் மதுபாட்டில் : ஆளுநர் ரவி வருத்தம்!

குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் பிரியங்காவுக்கு கிடைத்தது என்ன?

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel