ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு தடை விதிக்கப்பட்ட 6 இடங்கள்!

தமிழகம்

தமிழகத்தில் 44இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அக்டோபர் 2ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனைகள் விதித்து அனுமதி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை மீறும் வகையில் அனுமதி மறுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, ஆர்.எஸ்.எஸ். சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

கடந்த 2ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது பாதுகாப்பை காரணம் காட்டி கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு ஆர்.எஸ்.எஸ் தரப்பில் கடும் ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன்,

RSS allowed to march in 44 places in Tamil Nadu

உளவுத் துறை அறிக்கையை பார்த்த பிறகு 47இடங்களில் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து உத்தரவு பிறப்பிப்பதாக கூறி, வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்திருந்தார்.

இதையடுத்து இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று(நவம்பர் 4) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, காவல்துறை மூடி முத்திரையிட்டு தாக்கல் செய்த உளவுத்துறை அறிக்கைகள் முழுமையாக ஆராயப்பட்டன.

கடந்த ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளைதான் காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது. புதிய வழக்குகள் ஏதும் குறிப்பிடப்படவில்லை.

கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூரில் பல்லடம், கன்னியாகுமரியில் அருமனை, நாகர்கோவில் ஆகிய இடங்களை தவிர மற்ற இடங்களில் அனுமதி வழங்கலாம்.

இந்த 6இடங்கள் தவிர காவல்துறை அனுமதி வழங்கிய 3 இடங்கள் உள்பட 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்தலாம்.

உள்ளரங்கு கூட்டமாக பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் அரங்குகளாக இல்லாமல் விளையாட்டு திடல்களை தேர்ந்தெடுக்கலாம்.

6 இடங்களில் மட்டும் இயல்பு நிலை திரும்பும்வரை ஆர்.எஸ்.எஸ். காத்திருக்க வேண்டும். இந்த 6 இடங்களில் பேரணி நடத்த 2மாதங்களுக்கு பிறகு புதிய மனு கொடுக்கலாம் என்று உத்தரவிட்டார்.

கலை.ரா

காரில் சாய்ந்த சிறுவன்: எட்டி உதைத்த மனிதாபிமானமற்ற நபர்!

குளிர்சாதன பெட்டி வெடித்து மூவர் பலி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *