ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இயக்குநர் நெல்சன் மனைவி மோனிஷாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.75 லட்சம் பண பரிமாற்றம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்தடுத்து பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
அதிமுக, திமுக, பாஜக, தமாக ஆகிய கட்சியை சார்ந்தவர்களைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் நெல்சன் மனைவியும் வழக்கறிஞருமான மோனிஷாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய சம்பவ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணனை போலீசார் தேடி வரும் நிலையில், அவர்களிடம் மோனிஷா தொடர்பில் இருந்தது தெரியவந்ததுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகும் மோனிஷா இவர்களிடம் போனில் பேசி வந்திருக்கிறார். இதுகுறித்து மின்னம்பலத்தில் நேற்று
ஆம்ஸ்ட்ராங் கொலை: நெல்சன் மனைவியிடம் விசாரணை – பின்னணி என்ன? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்தசூழலில் மோனிஷாவின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.75 லட்சம் மொட்டை கிருஷ்ணன் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.
மொட்டை கிருஷ்ணன், மோனிஷா ஆகியோர் சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சந்தித்திருப்பதாகவும் போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த பணம் வழக்குத் தொடர்பாக அனுப்பப்பட்டது என போலீசாரிடம் மோனிஷா கூறியதாக தகவல்கள் வருகின்றன.
இந்தசூழலில் அந்த 75 லட்சம் ரூபாய் எதற்காக பயன்படுத்தப்பட்டது… குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
இந்தியாவில் முதன் முதலில் 100 கோடி வசூல் செய்த படம் தெரியுமா? அமிதாப், கான்கள் இல்லை!
மன அழுத்தம் என்னவெல்லாம் செய்யும் தெரியுமா?கொடுமைகளை பட்டியலிட்ட ராபின் உத்தப்பா