சென்னைப் பல்கலைக்கழகத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளையொட்டி பல்கலைக்கழகம் 10 நாள்கள் விடுமுறை அளித்திருந்தது. இந்த நிலையில், நேற்று பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்பட்டது. அப்போதுதான் பல்கலைக்கழக வளாகத்தில் கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பது, தெரியவந்தது.
குறிப்பாக வளாக நிர்வாக இயக்குநர் அறை, பல்கலைக்கழக அலுவலக அறை, நூலகம், தகவல் அறிவியல் துறை மற்றும் இந்திய இசை துறையில் இருந்த கணினிகள், ஹார்டு டிஸ்க்குகள், பேராசிரியர்களின் உடைமைகள், லாக்கரில் வைக்கப்பட்டிருந்த பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன.
கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் 2 லட்சம் ரூபாய் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில், D6 காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள காவல்துறை ஆய்வாளர், “குற்றச் செயலில் ஈடுபட்டோரின் எந்த தடயமும் இதுவரை கிடைக்கவில்லை. குற்றவாளிகள் கொள்ளையடித்ததோடு பொருட்களையும் சேதப்படுத்தியதால், மர்ம நபர்களின் நோக்கம் வேறு எதுவும் உள்ளதா என்ற நோக்கத்திலும் விசாரித்து வருகிறோம். கதவு, ஜன்னல் கண்ணாடிகள் எல்லாம் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்றார்.
ஆறு மாதங்களுக்கு முன்பு இதேபோல் இங்கு மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
கிச்சன் கீர்த்தனா: மொறு மொறு ஸ்வாலி
டிஜிட்டல் திண்ணை: மோடி வருகை- மூன்றாவது அணிக்கு அச்சாரமா? வேட்பாளர் தேர்வில் எடப்பாடி
தளபதி நடிக்கும் ஹாலிவுட் படம்: அப்டேட் குமாரு
நிவின் பாலி வயது 8,822… அசர வைக்கும் “ஏழு கடல் ஏழு மலை” வீடியோ!