ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.1,031.32 கோடி!

தமிழகம்

ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகையாக ரூ.1,031.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் தங்களுக்கு வர வேண்டிய பணப்பலன்கள் கிடைக்கவில்லை என்று கூறியதோடு பல சமயங்களில் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்தச்சூழலில் இன்று (மார்ச் 30) ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்களுக்குத் தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், “தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் உத்தரவின்படி, முதற்கட்டமாக 1.12.2022 அன்று அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடந்த மே 2020 முதல் மார்ச் 2021 வரை பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த பணியாளர்கள்,

என மொத்தம் 1,241 நபர்களுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்புத் தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்கள் ரூ.242.67 கோடியும்,

இரண்டாம் கட்டமாக, 27.03.2023 அன்று, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022 வரை பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த பணியாளர்கள் என மொத்தம் 1,626 நபர்களுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்புத் தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்கள் ரூ.308.45 கோடியும் வழங்கப்பட்டது.

இதையடுத்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஏப்ரல் 2022 முதல் நவம்பர் 2022 வரை ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த பணியாளர்கள் என மொத்தம் 3,414 நபர்களுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்புத் தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்களுக்காக ரூ.1031.32 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரியா

நகராட்சி துறை – சென்னைக்கு புதிய அறிவிப்புகள்!

ஐஸ்வர்யா ராய் இன்னும் உலக அழகிதான்: கமல்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *