ராம்குமார் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க மாநில மனித உரிமை ஆணையம் இன்று (அக்டோபர் 31 ) உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஐடி ஊழியரான சுவாதி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் கைதான நெல்லையைச் சேர்ந்த ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது மின் கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து ராம்குமாரின் தந்தை, தன் மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக்கூறி மனித உரிமை ஆணையத்தை நாடினார்.
இந்நிலையில், இவ்வழக்கை இன்று (அக்டோபர் 31) விசாரித்த மனித உரிமை ஆணையம், ராம்குமார் வழக்கை வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் நடத்த வேண்டும், சிறையிலுள்ள கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதல் காவலர்களை நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

மேலும் ராம்குமாரின் தந்தைக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 10 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பால்ரஸ் குண்டு, ஆணிகளை காண்பித்து அண்ணாமலை கேள்வி!