வெடிகுண்டு வீசி பிரபல ரவுடி வசூல் ராஜா வெட்டிக் கொலை!

Published On:

| By christopher

rowdy vasool raja murder at kanchi

பிரபல ரவுடி வசூல் ராஜாவை வெடிகுண்டு வீசி இன்று (மார்ச் 11) சுற்றி வளைத்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொன்றனர். rowdy vasool raja murder at kanchi

காஞ்சிபுரம் மாவட்டம் பொய்யாக்குளம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி வசூல் ராஜா மீது பல்வேறு கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல் என 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஏ+ ரவுடியான இவர், கடந்த சில நாட்களாக காஞ்சிபுரம் மாவட்டம் திருக்காலிமேடு பகுதியில் இருந்து வந்தார். இந்த நிலையில் இருச்சக்கர வாகனத்தில் இன்று அந்த பகுதிக்கு வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், வசூல் ராஜாவை நோக்கி திடீரென வெடிகுண்டு வீசியது. இந்த திடீர் தாக்குதலில் இருந்து சுதாரிப்பதற்குள், அவரை சுற்றிவளைத்த 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்று தப்பிச் சென்றது.

இதுகுறித்த தகவலறிந்த சிவகாஞ்சி போலீசார் வசூல் ராஜாவின் உடலைக் கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்தில் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி சண்முகம், ஏடிஎஸ்பி அண்ணாதுரை தலைமையில் ஆய்வு மேற்கொண்ட போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஏற்கெனவே வசூல் ராஜா மீது பல வழக்குகள் இருக்கும் நிலையில், மர்மநபர்களால் இன்று பட்டப்பகலிலேயே வெடிகுண்டு வீசி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share