தொடர் மழையால் அழுகும் தக்காளிகள்: மீண்டும் விலை உயரும் அபாயம்!

Published On:

| By Selvam

தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் திருப்பூர் பகுதிகளில் ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்த தக்காளிகள் தற்போது அறுவடை செய்யப்பட்டு வரும் நிலையில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தக்காளி பழங்கள் அழுகி வருகின்றன. எனவே வெளியூர் வரத்து இல்லாவிட்டால் தக்காளி மீண்டும் விலை உச்சத்தை தொடும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது பயிரிடப்பட்டுள்ள செடிகளின் இலைகள் தீயில் கருகியது போல் காட்சியளிக்கின்றன. செடியில் பூ, பிஞ்சு, இலைகள் என்று எதுவும் இல்லை. மழையால் தக்காளி விளைச்சல் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் வரும் நாட்களில் தக்காளி வரத்து வெகுவாக குறையும் அபாயமும் உள்ளது.

கார்த்திகைப் பட்டத்தில் விவசாயிகள் தக்காளி நடவு செய்ய ஆயத்தம் ஆகி வருகின்றனர். அவை தை மாதத்தில்தான் அறுவடைக்கு வரும். எனவே வெளியூர் வரத்து இல்லாவிட்டால் தக்காளி விலை உச்சத்தை தொடும் நிலை ஏற்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராஜ்

நடப்பு பாராளுமன்றத்திலேயே எங்களுக்கு நீதி கிடைக்காதா?

திருவண்ணாமலை தீபத்திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்!

ஹெல்த் அண்ட் பியூட்டி: முகப்பருக்களைத் தடுக்க… தவிர்க்க…

விஜய் சேதுபதி ரொம்ப பிஸி: அடுத்த படங்களின் அப்டேட் இதோ!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share