சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 1,500 கிலோ கெட்டுப்போன இறைச்சி… பொதுமக்கள் ஷாக்!

Published On:

| By Minnambalam Login1

rotten mutton

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 1,556 கிலோ கெட்டுப்போன ஆட்டுக்கறி, ஆட்டுக்கால்கள், கெட்டுப்போன காளான்கள் போன்ற பொருட்கள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் இன்று (செப்டம்பர் 9) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு டெல்லியில் இருந்து தமிழ்நாடு விரைவு ரயில் இன்று காலை வந்துள்ளது. இந்த ரயில் மூலமாக வந்த பல சரக்கு பெட்டிகளிலிருந்து கெட்டுப்போன வாடை வந்திருக்கிறது. இதனால் ரயில்வேத்துறை அதிகாரிகள் உணவு பாதுக்காப்புதுறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள்.

அங்கு வந்த உணவுத்துறை அதிகாரிகள் அந்த பெட்டிகளை திறந்து பார்த்தபோது, அந்த பெட்டிகளில் கெட்டுப்போன ஆட்டுக்கறி மற்றும் ஆட்டுக்கால்கள், கெட்டுப்போன பார்பகியூ பனீர் மற்றும் காளான்கள் போன்ற 1,556 கிலோ எடையுள்ள பொருட்கள் இருந்துள்ளது. இதை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழிப்பதற்காக எடுத்துச்சென்றனர்.

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த உணவு பாதுகாப்புதுறை அதிகாரி சதீஷ் “ இந்த 1556 கிலோ கெட்டுப்போன ஆட்டுக்கால்கள், ஆட்டிறைச்சிகள், பனீர் போன்றவை முன்னதாக வந்திருக்க வேண்டும். ஆனால், வெகு தாமதமாக வந்துள்ளது. அதனால் தான் கெட்டுப்போய் பலத்த துர்நாற்றம் வந்துள்ளது.

இந்த பொருட்களை யார் அனுப்பினார்கள்? யாருக்காக அனுப்பினார்கள்? போன்ற எந்த விபரமும் இந்த பெட்டிகளில் எழுதப்படவில்லை. அதனால் அதை அழிப்பதற்காக நாங்கள் எடுத்துச் சென்றுள்ளோம்” என்றார்.

தமிழகத்தில் இது போன்ற நிகழ்வு நடப்பது முதல் முறை அல்ல. இதற்கு முன், சென்ற ஆகஸ்ட் 21-ஆம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு ராஜஸ்தானில் இருந்து வந்த அனுவிரட் என்ற ரயிலில், தெர்மகோல் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த , ஏறத்தாழ 1700 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சியை உணவு பாதுக்காப்பு துறை அதிகாரி சதீஷ் தலைமையிலான குழு கைப்பற்றியது.

இதனின் தொடர்ச்சியாக சைதாப்பேட்டையில் உள்ள ஒரு குடோனில் சதீஷின் குழு சோதனை நடத்தியுள்ளது. அங்கு சுமார் 700 கிலோ கெட்டுப்போன ஆட்டுக்கால்கள் இருந்துள்ளது. அதை உணவு பாதுகாப்பு துறையினர் எடுத்துச் சென்று அழித்தனர். மேலும், அந்த குடோனிற்கு சீல் வைக்கப்பட்டது.

இதுபோன்ற தொடர் நிகழ்வுகள் மக்களை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இந்த இறைச்சிகளை யாரோ வேண்டும் என்றே அனுப்புகிறார்களா?அல்லது தற்செயலாக இப்படி நடக்கிறதா? எப்படி கடைகளில் இறைச்சிகளை நம்பி வாங்கி சாப்பிடுவது என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுமட்டுமல்லாமல், இந்த இறைச்சிகளை அனுப்பிய நபர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

”திருமண வாழ்வில் இருந்து விலகுகிறேன்” : ஜெயம் ரவி

விஜயகாந்துக்கு பண்ருட்டி…  விஜய்க்கு செஞ்சியா? பதிலளித்த செஞ்சி ராமச்சந்திரன்

”மக்களை தேடிச் சென்று அரசே திட்டங்கள் வழங்கும் காலம் இது”: உதயநிதி ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share