சென்னையில் பெசண்ட் நகர் முதல் மெரினா கடற்கரை வரை ரோப் கார் சேவை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் தேசிய நெடுஞ்சாலைகள் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனம் சார்பில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ரோப் கார் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா குஜராத், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா இரண்டு இடத்திலும்,
ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடத்திலும் ரோப் கார் சேவையைக் கொண்டு வர மத்திய அரசு ஆய்வு மேற்கொள்ள உள்ளது.
அதன்படி அதிகபட்ச தூரமாக மகாராஷ்டிராவில் 5 கி.மீ. வரையும், இரண்டாவதாகத் தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரையிலிருந்து பெசன்ட் நகர் எலியட் கடற்கரை வரை 4.6 கி.மீ. தொலைவுக்கு ரோப் கார் சேவை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
புவிசார் தொழில்நுட்பம், பொறியியல் , சுற்றுச்சூழல் தாக்கம் ஆகியவை குறித்து ஆய்வு நடத்தி இந்த திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.
பிரியா
யூனியன் வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை: சிசிடிவி காட்சிகளை வைத்து தேடுதல்!
துணிவுக்கு முன்பே வெளியாகும் வாரிசு!