குட்டீஸ் விரும்பும் ஸ்பெஷல் டிஷ் ‘ரோல்’. அனைத்து வயதினருக்கும் ஏற்ற அந்த ரோலை எளிமையாக வீட்டிலிருந்தபடியே செய்ய இந்த தோசை ரோல் ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
பச்சரிசி – ஒரு கப்
புழுங்கல் அரிசி – ஒரு கப்
ஓட்ஸ் – ஒரு கப்
உளுத்தம்பருப்பு – கால் கப்
அவல் – அரை கப்
பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம், முட்டைகோஸ், குடமிளகாய் – தலா ஒரு டேபிள்ஸ்பூன்
துருவிய கேரட்- ஒரு டேபிள்ஸ்பூன்
சில்லி ஃபிளேக்ஸ் – ஒரு டீஸ்பூன்
சீஸ் – கால் கப்
ஓரிகானோ – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
புதினா சட்னி – தேவையான அளவு
தக்காளி சட்னி – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுத்தம்பருப்பு இந்த மூன்றையும் தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊற வைத்து இட்லி மாவுப் பதத்துக்கு அரைத்துக் கலந்து கொள்ளவும். ஓட்ஸ், அவல் இரண்டையும் அரை மணி நேரம் ஒன்றாக ஊற வைத்து, அரைத்துக்கொள்ளவும்.
இதை அரிசி மாவுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து ஒரு பாத்திரத்தில் மூடி வைத்துவிடவும். மறுநாள் காலையில் சீஸ் மற்றும் கேரட்டை தனித்தனியே துருவிக் கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, சூடானவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி முட்டைகோஸ், குடமிளகாய், சில்லி ஃபிளேக்ஸ் ஓரிகானோ, சிறிதளவு உப்பு போன்றவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும்.
இவை அனைத்தும் வதங்கிய பிறகு, இந்தக் கலவையானது டிரை மசாலா பதத்தில் இருக்கும். வெந்தவுடன் இறக்கி தனியே வைத்துக்கொள்ளவும். தோசைக்கல்லில் தயாராக உள்ள மாவை ஊற்றவும். முறுகலாகவும் இல்லாமல், ஊத்தப்பம் போலவும் இல்லாமல், மென்மையான பதத்தில், ஒரே அளவு கொண்ட இரண்டு தோசைகளை ஊற்றி எடுக்கவும்.
பிளேட்டில் ஒரு தோசையை வைத்து, அதன் மீது புதினா சட்னியைத் தடவவும். பின், இதன் மீது மற்றொரு தோசையை வைத்து, அதன் மீது தக்காளி சட்னியைத் தடவவும், இதற்கு மேல், நாம் தயாராக செய்து வைத்துள்ள டிரை மசாலாவை மேலே பரப்பி விடவும்.
இறுதியில், துருவிய கேரட் மற்றும் சீஸை மேலே தூவி தோசையை ரோல் செய்யவும். ரோல் செய்த தோசையை சிறிய சிறிய துண்டுகளாக கட் செய்து பரிமாறவும்.
எடை குறைப்பும் முடி உதிர்வும்… உணவின் பங்கு என்ன?
அதானி குழுமத்தால் நட்டத்தில் எல்ஐசி, எஸ்பிஐ : காங்கிரஸ் கடும் தாக்கு
U19 உலகக்கோப்பை: இந்தியா சாம்பியன் – மெகா பரிசு அறிவித்த பிசிசிஐ!