முதல்வர் அறிவிப்பு: இன்று பெண் காவலர்கள் அணிவகுப்பு!
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி இன்று (மார்ச் 19) முதல் மகளிர் காவலருக்கு காலை 8 மணிக்கு ரோல்கால் எனப்படும் காவலர்கள் வருகை அணிவகுப்பு நடக்கிறது என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
காவல் துறையில் மகளிர் காவலர்கள் சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவுபெறுவதை முன்னிட்டு காவல்துறை சார்பில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், மகளிர் காவலர் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, பெண் காவலர் நலனுக்காக ஒன்பது அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில் முக்கியமானது பெண் காவலர்களின் நீண்டநாள் கோரிக்கையான ‘ரோல் கால்’ எனப்படும் காவல் வருகை அணிவகுப்பு, காலை 7 மணிக்கு பதில் 8 மணி என மாற்றப்படும் என்று அறிவித்தார்.
இந்த நிலையில், முதலமைச்சர் கொண்டுவந்த திட்டத்தை காவல் துறை நடைமுறைப்படுத்துவதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
இன்று முதல் மகளிர் காவலருக்கு காலை 8 மணிக்கு ரோல் கால் ( காவலர்கள் வருகை அணிவகுப்பு ) நடக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
ராஜ்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலை அஜெண்டா இதுதான்! சீனியர்களின் உள்ளே வெளியே ஆட்டம்!