துணிவு படத்தை பார்த்து கொள்ளையடிக்க முயன்றதாக திண்டுக்கல்லில் பட்டப் பகலில் வங்கியில் புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட நபர் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
திண்டுக்கல் – தாடிக்கொம்பு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. வங்கியில் இன்று (ஜனவரி 24) காலை நான்கு பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்பொழுது திண்டுக்கல் பூச்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த கலீல் ரகுமான் (வயது 25) கையில் மிளகாய் பொடி, ஸ்பிரே, கட்டிங் பிளேடு உட்பட ஆயுதங்களுடன் உள்ளே சென்றுள்ளார்.
பணியில் இருந்த ஊழியர்கள் மீது மிளகாய் பொடி தூவி ஸ்பிரே அடித்துள்ளார். பின்னர் தான் கொண்டு வந்த கயிற்றால் வங்கி ஊழியர்கள் 3 பேரை கையை கட்டிப்போட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்றுள்ளார்.
அப்போது வங்கி ஊழியர் ஒருவர் வெளியே ஓடி வந்து பொதுமக்களை பார்த்து கொள்ளை கொள்ளை என கூச்சலிட்டு அழைத்தார். பின்னர் பொதுமக்கள் வங்கியின் உள்ளே சென்றனர்.
இதனையடுத்து பொதுமக்கள் உதவியுடன் குற்றவாளியைப் பிடித்தனர். இதனை அடுத்து திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் கொள்ளையடிக்க முயன்ற கலீல் ரகுமானை திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் விசாரணையில் வாழ்க்கை வெறுத்து விட்டதாகவும், அதனால் சினிமாவை பார்த்து தான் கொள்ளையடிக்க முயற்சி செய்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் தற்போது வந்துள்ள துணிவு படம் உட்பட அனைத்து படங்களையும் பார்த்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.
பகல் நேரத்தில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் சாலையில் வங்கியில் கொள்ளை முயற்சி நடந்ததால் திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது.
கலை.ரா
எங்கள் எய்ம்ஸ் எங்கே? – ஒற்றை செங்கலுடன் போராட்டம்!
சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அனுமதி: உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!