தங்க கம்மலுக்காக பெண்ணின் காதை அறுத்த கும்பல்… துடித்து போன கணவர்!

தமிழகம்

சிவகங்கை மாவட்டத்தில் கம்மலுக்காக பெண்ணின் காதை அறுத்து சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் ஓடுவான்பட்டியை சேர்ந்த தம்பதியினர் சின்னையா- சரஸ்வதி. நேற்று இரவு இவர்கள் தங்கள் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, மர்ம கும்பல் வீட்டுக்குள் நுழைந்து, சின்னையனை அடித்து துவைத்துள்ளது. அதோடு, வீட்டில் தங்க நகைகள் ஏதாவது உள்ளதா என்றும் பீரோக்கள் அலமாரியை உடைத்து பார்த்துள்ளனர். உள்ளே எதுவும் இல்லை .

இதனால், ஆத்திரமடைந்த கும்பல் சரஸ்வதியின் காதை பார்த்துள்ளது. அவரின் , இரு காதுகளிலும்   இருந்த தங்க தோடுகள் அந்த கும்பலின் கண்ணை உறுத்தியது. அவரிடம் கம்மல்களை கழற்றி தரும்படி கூட கேட்கவில்லை. இரக்கமே இல்லாத அந்த கும்பல் அவரின் இரு  காதுகளையும் அறுத்து சென்றுள்ளது. இதனால், சரஸ்வதி வலியால் துடித்தார். காதில் இருந்து ரத்தம் வடிந்தபடி இருந்த மனைவியின் நிலையை பார்த்த கணவர் சின்னையாவும் துடித்து போனார்.

பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. இதையடுத்து, தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து, சரஸ்வதிக்கு காதில் கட்டுப் போட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தில் நடந்த மற்றொரு சோகம் என்னவென்றால், கடந்த ஜனவரி மாதத்திலும் சின்னையாவின் வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்ததுதான். அப்போது, சின்னையாவின்  வீட்டில் இருந்த 10 பவுன் நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது. அந்த தங்க நகைகளே இன்னும் மீட்கப்படாத நிலையில் அடுத்து நடந்த கொள்ளை முயற்சியும் காது அறுப்பு சம்பவமும் இந்த தம்பதியை நிலை குலைய செய்துள்ளது.

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடத்திலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 அடுத்தடுத்து என்கவுண்ட்டர்… கமிஷனர் அருண் விளக்கம்: மனித உரிமை ஆணையம் உத்தரவு!

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: சித்திரை (18.10.2024 முதல் 15. 11.2024 வரை)

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *