சீறும் காளைகள்… பாயும் காளையர்கள் : அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது!

Published On:

| By christopher

Avaniyapuram Jallikattu Begins

அவனியாபுரத்தில் இன்று (ஜனவரி 15) காலை 7 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டுப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் தைப்பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறும் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலக புகழ்பெற்றவையாக கருதப்படுகின்றன.

அதன்படி தை முதல் நாளான இன்று காலை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இதில் 1000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்கின்றனர்.

முதலில் போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் உறுதி மொழி ஏற்ற நிலையில், போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

முதல் சுற்றில் சுமார் 50 வீரர்கள் கலந்துகொண்டுள்ள நிலையில், சீறி வரும் காளைகளை பிடிக்க வீரர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

அவனியாபுரம் போட்டியில் முதல் பரிசு பெறும் மாட்டின் உரிமையாளருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பிலும் மற்றும் அதிக காளைகளைப் பிடித்து முதலிடம் பெறும் மாடுபிடி வீரருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பிலும் கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.

போட்டியில் காயமடையும் வீரர்கள் மற்றும் காளைகளுக்காக சுகாதாரத்துறை மற்றும் கால்நடைத்துறை சார்பாக சிறப்பு முதலுதவி சிகிச்சைக்கான மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் கூடுதல் மருத்துவ சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

பியூட்டி டிப்ஸ்: பல் சொத்தையைத் தடுக்க எளிய வழி!

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணிராதீங்க!

சார்வாகர் கூறும் தேசியத்தின் உண்மைகளும், பொய்களும் – அறிஞர் பார்த்தா சாட்டர்ஜி அளித்துள்ள அபூர்வ நூல்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel