தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே சுற்றுலா வேன் மீது லாரி மோதியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்திற்கு ஆன்மிக சுற்றுலா வந்துள்ளனர். அவர்கள் ராமேஸ்வரத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு 2 வேன்களில் கன்னியாகுமரி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது நெல்லை – தூத்துக்குடி நெடுஞ்சாலையில் முறப்பநாடு அருகே இன்று (டிசம்பர் 31) அதிகாலை 4 மணியளவில் சென்று கொண்டிருந்த போது எதிர் திசையில் வந்த லாரி சுற்றுலா வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆன்மிக சுற்றுலா வந்த சுமன், பார்வதி ஆகிய 2 பெண்கள் உயிரிழந்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த 16 பயணிகள் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் சிகிச்சை பலனின்றி ஒரு வயது பெண் குழந்தை உயிரிழந்தது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டிற்கு ஆன்மிக சுற்றுலா வந்தவர்கள் விபத்துக்குள்ளானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
புத்தாண்டில் கனமழை? : தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குட்நியூஸ்!
புத்தாண்டு கொண்டாட்டம்: மது விற்பனைக்கு நள்ளிரவு 1 மணி வரை அனுமதி!