முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
எம்ஜிஆர் கழக நிறுவனரும், சினிமா தயாரிப்பாளரும், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவருமான ஆர்.எம்.வீரப்பன் நேற்று வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார்.
அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள், திரை பிரபலங்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் இன்று அவரது உடல் நுங்கம்பாக்கம் மின் மயானத்தில் 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கு நிகழ்வில் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, “5 முறை அமைச்சராகவும் மூன்று முறை சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், 2 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய ஆர்.எம்.வீரப்பனுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும்” என்று அரசு அறிவித்தது.
தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலை பெற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
அனைத்து தியேட்டர்களுக்கும் விடுமுறை அறிவிப்பு!
Thalapathy 69: டிவிவி நிறுவனம் அவுட்… முட்டி மோதும் 3 நிறுவனங்கள்?