சென்னையில் அதிகரித்து வரும் மின் தேவை: தவிர்ப்பது எப்படி?

Published On:

| By Kavi

சென்னையில் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் தொடர்வதால் மக்கள் ஏசி மற்றும் குளிர்சாதனப் பொருட்களை அதிகம் பயன்படுத்துவதால் மின் தேவை 25 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் மின்சாரத் தேவை என்பது 20,701 மெகாவாட்டாக இருந்து வந்தது.

அவை ஏப்ரல் நிறைவு நாளான 30-வது நாளில் 45.43 கோடி யூனிட் மின்நுகர்வு பதிவாகி உள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

இவைதான் தமிழ்நாட்டில் பதிவான மிக அதிகமான மின்சார நுகர்வாகும்.

கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மின்சாரப் பயன்பாட்டை ஒப்பிடும்போது, கோடைக்காலம் தொடங்கி மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் அதிகப்படியான மின்நுகர்வு இருந்து வந்திருக்கிறது. இவற்றில் முறையே, தமிழ்நாட்டின் சராசரி மின்நுகர்வு 30 கோடி யூனிட்டாக உள்ளது.

இந்த நிலையில், மே மாதம் அதிகபட்சமாக சென்னையில் உச்ச மின் தேவை 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

“சென்னையில் இந்த அளவுக்கு மின் தேவை அதிகரித்ததற்கு, வீடுகள் மற்றும் வணிக கட்டடங்களில் மக்கள் அதிக அளவில் ஏ.சி மற்றும் குளிர்சாதனப் பொருட்களைப் பயன்படுத்தியதே காரணம்.

மேலும், ஏ.சி மற்றும் குளிர்சாதனங்களின் பயன்பாடு அதிக அளவில் மின் தேவையை அதிகரிக்கிறது.

அதே நேரத்தில், வெப்பநிலை குறையும்போது, ஏசி பயன்பாடு குறையும், மின் தேவை குறையும்” என்று மின்வாரிய அதிகாரிகள் கூறுகிறார்கள்.

அதிகரித்து வரும் இந்த மின் தேவையைத் தவிர்க்க… ” கோடைக்காலத்தில் அதிகம் பயன்படுவது ஏசிதான். அதன் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளலாம்.

குளிர்சாதனப் பெட்டியில் காற்றோட்டம் அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் எளிதாக அதற்கு காற்று நுகர்வு கிடைக்கும். இதனால் அதன் உள்ளீடு மின்சாரம் குறையும்.

கோடைக் காலங்களில் வாஷிங் மெஷினை துவைக்க மட்டும் பயன்படுத்தலாம். துணிகளை உலர்த்த டிரையரை குளிர் அல்லது மழைக்காலங்களில் மட்டும் பயன்படுத்தும்போது மின்சாரம் மிச்சமாகும்.

அதுபோல கணினி பயன்படுத்தும் சமயங்களில் நீண்ட நேரம் ‘ஸ்கிரீன் ஸேவர்மோடில்’ வைப்பதால் பன்மடங்கு மின்சார செலவு அதிகமாகிறது.

கோடைக்காலத்தில் மின் தேவைகளை வழங்குவதில் அரசு கவனமுடன் இருப்பதும் அவற்றை முறையாகப் பயன்படுத்துவதில் பொதுமக்கள் கண்ணியம் தவறாமல் இருப்பதும் கோடைக்காலத்தைக் கடந்து செல்வதற்கு பேருதவியாக இருக்கும்” என்கிறார்கள் மின்வாரியத்துறையினர்.

ஆனால், கோடை மழை காரணமாக ஏப்ரல் மற்றும் மே முதல் பாதியில் நிலவிய வெப்ப அலை சிறிது குறைந்த பிறகு, சென்னையில் 2024-ல் கடந்த திங்கட்கிழமை அதிகபட்சமாக 40.6 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளதும் இந்த வெப்ப நிலை தொடரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ் : தென்மேற்கு பருவமழை தொடங்குவது முதல் பிரதமர் மோடியின் குமரி வருகை வரை!

கிச்சன் கீர்த்தனா: நெத்திலி கருவாடு தொக்கு!

பியூட்டி டிப்ஸ்: வெயில்படும் இடங்களில் கருமை… நீக்குவது எப்படி?

T20 World cup 2024: இந்தியாவிற்கு எப்போது போட்டிகள்? முழு அட்டவணை இதோ!