நார்ச்சத்து, நீர்ச்சத்து நிறைந்த பீர்க்கங்காய் கட்டாயம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய அவசியமான ஒன்று. ஆனால், அதை பயன்படுத்துபவர்கள் குறைவு. பீர்க்கங்காய் தோலில் மட்டுமல்ல… பீரக்கங்காயிலும் சட்னி செய்து அசத்த இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
கடலைப்பருப்பு – 60 கிராம்
கறுப்பு உளுந்து – 60 கிராம்
காய்ந்த மிளகாய் – 4 – 6
தேங்காய் – அரை மூடி (துருவவும்)
உப்பு – தேவையான அளவு
இஞ்சி – கால் இன்ச் துண்டு
கறிவேப்பிலை – ஓர் ஆர்க்கு
எண்ணெய் – தேவையான அளவு
தாளிப்பதற்கு…
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
கடுகு – கால் டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஓர் ஆர்க்கு
சட்னிக்கு…
பீர்க்கங்காய் – ஒன்று (தோல் சீவி, நறுக்கவும்)
புளி – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
எப்படிச் செய்வது?
வாணலியில் சிறிது சிறிதாக எண்ணெய்விட்டு சூடானதும் முதலில் குறிப்பிட்டுள்ள எல்லா தேவையான பொருள்களையும் தனித்தனியாக வதக்கி, பொன்னிறமாக எடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு சூடு ஆறியதும், அவற்றைத் தண்ணீர்விடாமல், மிகவும் நைஸாக இல்லாமல்… அதாவது, சற்று கொரகொரப்பாக எடுத்துக்கொள்ளவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலையைத் தாளித்து, அரைத்து வைத்துள்ள இன்ஸ்டன்ட் சட்னி மிக்ஸில் சேர்த்துக் கலக்கவும். இதை ஒரு கண்ணாடி ஜாரில் போட்டு மூடி, ஃப்ரீசரில் ஒரு வாரம் வரை வைத்திருக்கலாம்.
சட்னி செய்ய…
சிறிதளவு எண்ணெயைச் சூடாக்கி நறுக்கி வைத்திருக்கும் பீர்க்கங்காயை சேர்த்து, புளியையும் போட்டு சிறிது நேரம் வதக்கவும். இதை மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து இன்ஸ்டன்ட் சட்னி பொடி மிக்ஸ் சேர்த்து அரைக்கவும். சுவையான பீர்க்கங்காய்ச் சட்னி ரெடி. இதை தோசை, இட்லி மற்றும் சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஓப்பனிங்லாம் நல்லாதான் இருக்கு… பினிஷிங் சரி இல்லையேப்பா – அப்டேட் குமாரு
நாடாளுமன்ற வளாகத்தில் தள்ளு முள்ளு… ராகுல் மீது வழக்கு!
பங்கம் செய்யும் சுங்கச்சாவடிகள்… தனியார் பேருந்து கட்டணம் உயர்வா?
அம்பேத்கர் குறித்து சர்ச்சைப் பேச்சு: அமித்ஷா ராஜினாமா செய்யாதது ஏன்? – ராகுல் கேள்வி!