கிச்சன் கீர்த்தனா: அரிசி வடை

Published On:

| By Selvam

அரையாண்டு விடுமுறையில் வீட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு எதை செய்து கொடுத்து அசத்தலாம் என்று நினைக்கும் இல்லத்தரிசிகளுக்கு  சுவையான, எளிதாகச் செய்யக்கூடிய இந்த அரிசி வடை உதவும். காலை உணவுடன் சேர்த்துக் கொடுத்தால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள்.

என்ன தேவை?

பச்சரிசி – ஒரு கப்
உளுத்தம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
புளித்த தயிர் – ஒரு கப்
தேங்காய்த் துருவல் – ஒரு கப்
பச்சை மிளகாய் – 10 (நறுக்கவும்)
எண்ணெய் – 250 மில்லி
உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

அரிசியுடன் உளுத்தம்பருப்பு, தயிர் சேர்த்து 3 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து அதனுடன் தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாக, நைஸாக அரைத்தெடுக்கவும். அதனுடன் உப்பு சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து மாவைச் சிறிய வடைகளாக வாழையிலையில் தட்டிப்போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். சாம்பார் அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அதிமுகவை பாராட்டும் அண்ணாமலை… டெல்லி விசிட் தந்த மாற்றமா?

ஐடியா இல்லாத மனுஷன் : அப்டேட் குமாரு

பொங்கல் தொகுப்பில் ஏன் பணப்பரிசு இல்லை? – அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!

தி ஸ்மைல்மேன்: விமர்சனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel