வீக் எண்ட் ஸ்பெஷலாக விதம் விதமாகச் செய்யலாம் என்று நினைத்தாலும் அதற்கேற்ற பொருட்களின் பட்டியலை யோசித்தால் இந்த உணவு வேண்டாமே என்று தோன்றும்.
அப்படிப்பட்டவர்கள் எளிதாகக் கிடைக்கும் அரிசி மாவில் இந்த டேப் சிப்ஸ் செய்து தரலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் உங்களைக் கொண்டாடுவார்கள்.
என்ன தேவை?
அரிசி மாவு – ஒரு கப்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
ஓமம் – அரை டீஸ்பூன்
நெய் – 2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – ஒரு கப் + அரை கப்
எப்படிச் செய்வது?
ஒரு வாணலியில் ஒரு கப் தண்ணீரை ஊற்றி அதில் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், ஓமம், நெய் ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
கலவை கொதித்தவுடன் இதில் அரிசி மாவைச் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். பின்னர் கலவையை நன்கு கிளறி இன்னும் அரை கப் வெந்நீரைச் சேர்த்துப் பிசைந்துகொள்ளவும்.
மாவை கையளவு உருண்டைகளாக்கி ரிப்பன் பக்கோடா அச்சில் போட்டு, எண்ணெய் தடவிய தட்டில் பிழிந்துகொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி தட்டில் பிழிந்துவைத்திருக்கும் மாவைச் சிறு துண்டுகளாக்கி எண்ணெயில் பொரித்தெடுத்தால் அரிசி மாவு டேப் சிப்ஸ் தயார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…