பணி ஓய்வு: தாய்க்கு சல்யூட் அடித்த சைலேந்திர பாபு

தமிழகம்

காவல்துறை பணி என்பது எளிமையாக இருக்காது என்றும் அதில் இருக்கும் சிக்கல்களை தைரியமாக எதிர்கொண்டு காவல்துறையை முன்னேற செய்ய வேண்டும் எனவும், பணி ஓய்வு பெற்ற இந்த நேரத்தில் தனது தாய்க்கு சல்யூட் செய்வதாகவும் ஓய்வுபெற்ற தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

தமிழக காவல் துறையில் இருந்து விடைபெறும் முன்னாள் காவல் துறை இயக்குநர் டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு தமிழக காவல் துறை சார்பில் பிரியாவிடை அளிக்கப் பட்டது.

36 ஆண்டு காலமாக தமிழக காவல்துறையில் பணியாற்றிய டிஜிபி சைலேந்திரபாபு இன்றுடன் (ஜூன் 30) ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில் தமிழக காவல் துறை சார்பில் பிரியாவிடை அளிக்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

பின்னர் பேசிய சைலேந்திர பாபு, “கடந்த இரண்டு வருடங்களாக தமிழ்நாட்டில் ஜாதி கலவரங்கள் இல்லை, ரயில் கலவரங்கள் இல்லை, துப்பாக்கி சூடுகள் இல்லை, போதை பொருள் ஒழிப்பில் தனி கவனம் செலுத்தப்பட்டது.

வரலாற்றில் முதன் முறையாக கஞ்சா வியாபாரிகள் மீது பொருளாதார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. காவல் நிலையங்களில் முதல்முறையாக வரவேற்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “மீனவ இளைஞர்களுக்கு இந்திய கடற்படையில் செல்வதற்கான பயிற்சிகள், அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் அணுகுமுறை பயிற்சியும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு காவல்துறையால் பெண்கள் காவல்துறையின் ஐம்பதாவது ஆண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

காவலர்களுக்கு ஒரு வாரத்திற்கு ஒரு நாள் கட்டாய ஓய்வு வழங்கப்பட்டது.
இரவு ரோந்து பணி முதல் முறையாக அறிமுகப்படுத்த பட்டிருக்கிறது. பெண் காவல்துறையின் வருகை 7 மணியிலிருந்து எட்டு மணி ஆக அறிவிக்கப்பட்டது. 155 காவலர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், “காவல்துறை பணி என்பது எளிமையாக இருக்காது. இந்த பணிகள் பல சிக்கலான சவால்களை சந்திப்பீர்கள். இந்த சவால்கள் உங்களை வேதனைக்கும் சோதனைக்கும் உட்படுத்தும். தைரியமாக எதிர் கொண்டு காவல்துறையை முன்னேற செய்ய வேண்டும். வடநாட்டு தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுகிறார்கள் என வதந்தி பரப்பும் போது தமிழ்நாட்டுக் காவல்துறையினர் ராணுவ வீரர்கள் போன்று செயல்பட்டார்கள்.

இரண்டு ஆண்டுகளில் காவல் நிலைய அளவிலும் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் நல்ல தலைவர்களை உருவாக்கி உள்ளேன். அவர்கள் தமிழக காவல்துறையை நல்ல கட்டத்திற்கு எடுத்துச் சொல்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
எனது கடமையை நன்றாக முடித்துவிட்டேன். நன்றி உணர்வு மேலோங்கிறது” எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “என்னுடைய மூத்த அதிகாரிகளுக்கு நன்றி சொல்ல ஆசைப்படுகிறேன். பல சந்தர்ப்பங்களில் காவல்துறையினர் எனது உயிரை காப்பாற்றி உள்ளார்கள். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடன் பணியாற்றிய காவல் துறையினருக்கும், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் பணியிலும் பணியாற்றியுள்ளேன் அதில் என்னுடைய பணியாற்றியவர்களுக்கும், எனக்கு உறுதுணையாக இருக்கும் எனது மனைவி சோபியாவுக்கும், எனது குடும்பத்தினருக்கும் உறவினருக்கும் நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறிய சைலேந்திர பாபு, “இந்த நிகழ்ச்சியை 93 வயது நிரம்பிய என்னுடைய தாயார் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருப்பார் இந்த நேரத்தில் அவருக்கு ஒரு சல்யூட் செய்கிறேன்” என்றார்.

மேலும், ”நீதித்துறைக்கும் காவல்துறைக்கும் நெருக்கமான உறவு எப்போதும் உண்டு. எனது கடமையை செய்ய உறுதுணையாக இருந்த தலைமை செயலாளர் இறையன்பு அவர்களுக்கு நன்றி. தற்போது தமிழக காவல்துறை இயக்குனராக பொறுப்பேற்றுள்ள சங்கர் ஜிவால் அவர்கள் பல நலத்திட்டங்களை தீட்டி சென்னை காவல்துறையில் பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார் அவருக்கு எனது வாழ்த்துக்கள்”என்று தெரிவித்தார்.

ஓய்வு பெற்றார் இறையன்பு… பதவி ஏற்றார் சிவதாஸ் மீனா

சொலிசிட்டர் ஜெனரலாக துஷார் மேத்தா மீண்டும் நியமனம்!

DGP Shailendra Babu speech
+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *