மதுரை கலைஞர் நூலகம்: ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு புத்தகங்கள் நன்கொடை!

Published On:

| By Selvam

மதுரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு 4714 புத்தகங்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

ஆசியாவில் இரண்டாவது மிகப்பெரிய நூலகமாக சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் செயல்பட்டு வருகிறது. தென் தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்காக கடந்த 11.01.2022 அன்று முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இந்த நூலகமானது 8 தரை தளங்களுடன் இரண்டு லட்சம் சதுர அடி பரப்பளவுடன் நவீன வசதிகளுடன் ரூ.134 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம் மொழிகளில் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் படிக்கும் வகையில் ரூ.60 கோடிக்கு புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை ஜூலை 15-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

இந்தநிலையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு பலரும் தங்களிடம் உள்ள புத்தகங்களை நன்கொடையாக வழங்கி வருகின்றனர். அந்தவகையில் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு 2492 ஆங்கில புத்தகங்கள் மற்றும் 2222 தமிழ் புத்தகங்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share