சென்னை ஐஐடியில் இரு வேறு சம்பவங்களில் இரண்டு மாணவர்கள் தற்கொலைக்கு முயன்றதில் ஒருவர் உயிரிழந்தார்.
ஐஐடியில் முதுநிலை ஆராய்ச்சி படிப்பை படித்து வரும் ஸ்டீபன் சன்னி ஆல்பட் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஆராய்ச்சி படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியாத காரணத்தினால் ஸ்டீபன் சன்னி மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோன்று மற்றொரு மாணவர் சரியாக படிக்க முடியாத காரணத்தினால் பாரசிட்டமால் மாத்திரையை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
ஆபத்தான நிலையில் அந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது பெயர் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
கலை.ரா
புல்வாமா தாக்குதல்: தியாகத்தை மறக்க மாட்டோம் என மோடி உருக்கம்!