75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் இன்று (ஜனவரி 26) ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றினார்.
நாடு முழுவதும் இன்று 75-வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் குடியரசு தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை, முதல்வர் ஸ்டாலின் மற்றும் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் வரவேற்றனர்.
தொடர்ந்து தேசியகொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றிவைத்தார். தேசிய கொடியை ஏற்றியபோது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.
இதனையடுத்து நடைபெற்ற முப்படையினரின் அணிவகுப்பை ஆளுநர் ரவி ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், எ.வ.வேலு, சக்கரபாணி, அன்பில் மகேஷ் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நேரடி நெல் கொள்முதல்: அன்புமணி ராமதாஸுக்கு சக்கரபாணி விளக்கம்!