சென்னை போக்குவரத்து காவல் துறையை நவீனப்படுத்தும் வகையில் நான்கு புதிய தொழில்நுட்பத் திட்டங்களை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்துள்ளார். அவற்றில் ஒன்றான ரிமோட் கண்ட்ரோல் சிக்னல்கள், விதிமீறும் வாகன ஓட்டிகளை அடையாளம் காண உதவும் என்று தெரிகிறது.
சென்னையில் அனைத்து சிக்னல்களையும் இயக்குவதற்கு தானியங்கி மற்றும் கையால் இயக்குவதற்கான வசதிகள் உள்ளன.
இவ்வாறு இயக்கப்படும் சிக்னல்களின் சிக்னல் கட்டுப்பாட்டை மாற்றுவதற்கு அருகில் சென்று செயல்படுத்த வேண்டியதாக உள்ளது.
இதனால் அந்த சந்திப்பில் மற்ற பகுதிகளுக்கு சென்று போக்குவரத்து நிலையைக் கண்காணிப்பதற்கும், விதிமீறும் வாகன ஓட்டிகளை அடையாளம் காணவும் முடியவில்லை.
இந்த நிலையில் தற்போது சாலை பாதுகாப்பு நிதியிலிருந்து ரூ.27,18,130 .செலவில் 170 சந்திப்புகளில் ரிமோட் கண்ட்ரோல் முறைகள் நிறுவப்பட்டுள்ளது.
இந்த ரிமோட் சிக்னல் மூலம் போக்குவரத்து காவலர்கள் திறமையாகச் செயல்படவும், சந்திப்புகளில் வாகன ஓட்டிகளின் சிறந்த ஒழுக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் இந்த ரிமோட் சிக்னல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினை நவீனப்படுத்தும் வகையில், ஆறு வேகக் காட்சி பலகைகள் (Speed display board), 45 பல்நோக்குச் செய்தி பலகைகள் (Variable Message System – Boards), 139 LED பொருத்தப்பட்ட போக்குவரத்து காவல் நிழற்குடைகள் தொழில்நுட்பங்கள் அடங்கிய சாதனங்களின் இயக்கத்தையும் காவல் ஆணையர் நேற்று தொடங்கி வைத்துள்ளார்.
ராஜ்
முதல்வருடன் நிதியமைச்சர் சந்திப்பு!
ஆஸ்கர் வென்ற ரகுவின் உயிரை காப்பாற்றிய சிவகார்த்திகேயன்!