மயிலாடுதுறையில் கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிகக் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத மழை பெய்துள்ளது.
மழை பாதிப்புகளை இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் “பாதிப்புகளைக் கணக்கெடுக்கச் சொல்லியிருக்கிறோம். மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ, அதற்கு ஏற்றபடி கணக்கெடுக்கப்பட்டு அந்த அடிப்படையில் நிவாரணம் வழங்கப்படும்” என்றார்.
இந்நிலையில், ”மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
கடும் மழையினால் சேதமடைந்துள்ள பயிர்கள் முறையாகக் கணக்கெடுக்கப்பட்டுச் சரியான நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்” என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
மோனிஷா
எம்பி தேர்தல்: பாஜக குறி வைக்கும் எட்டு தொகுதிகள் இதோ!
டி20: பாகிஸ்தான் தோல்வி-அக்தருக்கு ஷமி கொடுத்த பஞ்ச்!