மாணவர் வெட்டப்பட்டதை நேரில் கண்ட உறவினர் மரணம்: நிவாரணம் அறிவிப்பு!
திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி சம்பவத்தை நேரில் பார்த்து மாரடைப்பால் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 12) உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் 12ஆம் வகுப்பு மாணவனும், அவருடைய தங்கையும் சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது.
இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தொடர்பாக இதுவரை 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் அவரது தங்கைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் நிவாரண நிதி வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து தற்போது, இந்த சம்பவத்தை நேரில் பார்த்து மாரடைப்பால் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் நிதியுதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி மாவட்டம், நான்குநேரி வட்டம் மற்றும் கிராமத்தைச் சேர்ந்த திருமதி,அம்பிகா என்பவரது மகன் சின்னத்துரை மற்றும் மகள் சந்திரா செல்வி ஆகிய இருவரையும் கடந்த 9-8-2023 அன்று அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவத்தை நேரில் பார்த்த அவர்களது உறவினர் கிருஷ்ணன் (வயது 59) என்பவர் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
உயிரிழந்த கிருஷ்ணன் அவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரணநிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
விக்ரம் வாழ்நாள் வசூலை முறியடித்த ஜெயிலர்
இசை நிகழ்ச்சி ரத்து: ஏமாந்த ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் ஆறுதல்!