relief fund for ration card holders

வெள்ள நிவாரணம் : ரேஷன் கார்டு இல்லாதவர்கள் என்ன செய்வது?: அமைச்சர் பேட்டி!

தமிழகம்

சென்னையில் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இன்று (டிசம்பர் 11)  அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “சென்னையைப் பொறுத்தவரை ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் நிவாரணத் தொகை வழங்கப்படும். டிசம்பர் 16 ஆம் தேதி முதல் அதற்கான டோக்கன்கள் வழங்கப்படும். அதற்கடுத்த 10 நாட்களில் நிவாரணம் வழங்கும் பணி நிறைவடையும்.

திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் எந்தெந்த தாலுகாக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோ, அந்த தாலுகாவில் உள்ளவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும்” என்றார்.

தொடர்ந்து ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும், வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வந்து தங்கி இருப்பவர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்கப்படுமா என்ற கேள்விக்கு, “கணக்கீட்டை பொறுத்தவரை ஏதாவது ஒரு ஆதாரத்தை தான் எடுத்துக் கொள்ள முடியும். அதன்படி தற்போது ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும். பாதிக்கப்பட்டவர்கள் அரசுக்கு முறையீடு செய்யலாம்” என்று தெரிவித்தார்.

ரேஷன் கார்டுகள் விண்ணப்பித்து வராதவர்களுக்கு நிவாரணம் எப்படி கொடுக்கப்படும் என்ற கேள்விக்கு,  “இதுபோன்றவர்கள் வேறு ஆவணங்களை கொண்டு வந்து கொடுக்கலாம். இந்த ஆவணங்களுக்காகத்தான் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.  பாதிக்கப்பட்டவர்கள் யாரையும் விட்டுவிடக் கூடாது” என்றார் அமைச்சர்.

“வங்கிகளில் நிவாரண தொகை வழங்கினால் கணக்குதாரர்  செலுத்த வேண்டிய கடன் தொகை ஏதேனும் இருந்தால் நிவாரண தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த பிரச்சனையை மகளிர் உரிமை தொகை வழங்கிய போதே சந்தித்தோம். அதனால் நேரடியாக வழங்குகிறோம்” எனவும் கூறினார் தங்கம் தென்னரசு. 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

மத்திய பிரதேசத்தின் முதல்வராக முன்னாள் அமைச்சர்!

IPL2024: தோனி தொடங்கி கில் வரை… கேப்டன்களின் சம்பளம் இதுதான்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *