relief fund for fisherman family

மீனவ குடும்பங்களுக்கு ரூ.4.10 கோடி நிவாரணம்!

தமிழகம்

இறந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு காப்புறுதி திட்டத்தின் கீழ் நிவாரணம் வழங்கிட ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் ராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 10 அம்ச திட்டங்களை அறிவித்தார்.

அதில் இறந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசால் காப்புறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிவாரண நிதி என்று அறிவித்தார். இதனை செயல்படுத்துவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

இது குறித்து கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இன்று (செப்டம்பர் 5) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

“மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் எதிர்பாராமல் கடலில் ஏற்படும் அசாதாரண சூழ்நிலை மற்றும் இயற்கை சீற்றங்களின் காரணமாக இறக்கும் மீனவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசால் தேசிய மீன்வள கூட்டுறவு இணையத்தின் வழியாக மீனவர் குழு விபத்து காப்புறுதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மீனவர்களுக்கான குழு விபத்து காப்புறுதி திட்டம் செயல்படாத காலமான 01.06.2020 முதல் 18.10.2021 வரை இறந்த 205 மீனவர்/மீனவ மகளிர் குடும்பங்களின் துயரினை போக்கிடும் வகையில் 18.08.2023 அன்று இராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில் முதலமைச்சர் மீனவர் விபத்து காப்புறுதி திட்டத்தின் கீழ் அக்குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிட அறிவிப்பினை வெளியிட்டார்.

அவ்வறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக இறந்த 205 மீனவர்/மீனவ மகளிர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.4.10 கோடிக்கு (ரூபாய் நான்கு கோடியே பத்து லட்சம் மட்டும்) நிருவாக மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கி 30.08.2023 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மோனிஷா

உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய வேண்டும்: ஆளுநருக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்!

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரலாமா?: உயர் நீதிமன்றம் முதல்வருக்கு தந்த ஆலோசனை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *