“விருப்பமில்லாத திருமணத்தை பதிவு செய்தால் புனிதமாகிவிடாது” – உயர் நீதிமன்றம்!

தமிழகம்

விருப்பமில்லாமல் நடந்த திருமணத்தை பதிவு செய்வதால் மட்டும் அதன் புனிதம் கூடி விடாது என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கோவையில் உள்ள தேவாலயத்தில், கடந்த அக்டோபர் மாதம், விருப்பமில்லாமல் திருமணம் நடந்ததாக மணப்பெண் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த திருமணத்தை பதிவு செய்யக் கூடாது என பதிவுத்துறை தலைவருக்கு உத்தரவிடக் கோரி அவர் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்பு இன்று(டிசம்பர் 17) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, திருமணம் என்பது நடந்து அதை பதிவு செய்யாவிட்டாலும், அது செல்லத்தக்கது தான் என்றார்.  

அந்த திருமணத்தை நீதிமன்ற உத்தரவு மூலமாகத் தான் ரத்து செய்ய முடியும் என்பதால், மனுதாரர் கோரியபடி எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், விருப்பமில்லாமல் நடந்த திருமணத்தை பதிவு செய்வதால் மட்டும், அதற்கு புனிதம் கூடி விடாது எனத் தெரிவித்த நீதிபதி, திருமணத்தை செல்லாது என அறிவிக்க கோரி உரிமையியல் நீதிமன்றத்தை அணுக மனுதாரருக்கு உத்தரவிட்டுள்ளார்.

கலை.ரா

மனநலம் பாதித்த முதியவரை சித்தராக மாற்றிய கும்பல்: ஆளே மாறிய முதியவர்!

பில்கிஸ் பானு மனு தள்ளுபடி: இதுவரை நடந்தது என்ன?

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *