பதிவுத்துறையில் திருத்தியமைக்கப்பட்ட புதிய சேவை கட்டணம் ஜூலை 10ஆம் தேதி அமலுக்கு வருவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் இன்று (ஜூலை 8) வெளியிட்டுள்ள அறிக்கையில், “பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக மாற்றம் செய்யப்படவில்லை.
எனவே, பதிவுத்துறையால் வழங்கப்பட்டு வருகின்ற ஆவண பதிவு, பதிவு செய்யப்படும் ஆவணத்தினை பாதுகாத்தல், மின்னணு சாதனத்திலிருந்து ஆவண நகல்கள் வழங்குதல் போன்ற சேவைகளைப் பொருத்து கட்டண விகிதங்களை
மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் பதிவுச்சட்டம், 19௦8-இன் பிரிவு 78-இல் கட்டண விவர அட்டவணையிலுள்ள 20 இனங்களுக்கான கட்டண வீதங்களும் சில ஆவணப் பதிவுகளுக்கான பதிவு மற்றும் முத்திரை கட்டண வீதங்களும் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.
எடுத்துக்காட்டாக, ரசீது ஆவணத்திற்கு பதிவு கட்டணம் ரூ.20லிருந்து ரூ.200,- எனவும், குடும்ப நபர்களுக்கு இடையேயான செட்டில்மெண்ட், பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவு கட்டணம் ரூ.4,000லிருந்து ரூ.10,000 எனவும்,
அதிகபட்ச முத்திரை தீர்வை ரூ.25000 லிருந்து ரூ.40,000 எனவும், தனி மனை பதிவிற்கான கட்டணம் ரூ.200 லிருந்து ரூ.4000 எனவும், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ.10,000 என்று உள்ளதை சொத்தின் சந்தை மதிப்பிற்கு ஒரு சதவீதம் எனவும் மாற்றியமைப்பது உள்ளிட்டவை இதில் அடங்கும்.
இது 10.07.2023 முதல் நடைமுறைக்கு வருகிறது.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
நிதியமைச்சர் பேசும்போதே வெளியேறிய பெண்கள்: கதவைப்பூட்டி தடுத்த பவுன்சர்கள்!
தெலங்கானா மக்களுக்கு ஆபத்து: பிரதமர் மோடி