திருமணமான பெண்களைப் பணியமர்த்த மறுப்பதாக வெளிவந்த குற்றச்சாட்டு குறித்து ஃபாக்ஸ்கான் நிறுவனம் இன்று (ஜூன் 27) விளக்கமளித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவன தொழிற்சாலையில் ஆப்பிள் ஐஃபோன்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தொழிற்சாலையில் திருமணமான பெண்களைப் பணியமர்த்த மறுப்பதாக செய்திகள் வெளியானது.
இதுகுறித்து விளக்கம் அளிக்ககோரி, தமிழக அரசிற்கு, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் நேற்று (ஜூன் 26) நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இந்நிலையில், திருமணமான பெண்களுக்கு பணி வழங்க மறுத்ததாக வெளியான தகவலுக்கு ஃபாக்ஸ்கான் நிறுவனம் இன்று (ஜூன் 27) மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும், ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் புதிதாக பணிக்கு தேர்வானவர்களில் 25 சதவீதம் பேர் மணமான பெண்கள் எனவும், மற்ற நிறுவனங்களை விட மணமான பெண்களை ஃபாக்ஸ்கான் நிறுவனம் அதிகளவில் பணிக்காக தேர்வு செய்துள்ளது எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பெண்களுக்கும் சம அளவில் பணி வாய்ப்பு அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றுவோரில் 70 சதவீதம் பேர் பெண்கள். அவர்களின் பாதுகாப்பு காரணங்களுக்காகவே தங்கம், வெள்ளி உள்ளிட்ட உலோக ஆபரணங்களை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சபாநாயகரை தொடர்ந்து ஜனாதிபதி உரையிலும் ’எமெர்ஜென்சி’!
”நாடாளுமன்றம் என்றால் ஒரு நீதி, சட்டமன்றம் என்றால் ஒரு நீதியா?” : திமுகவை விளாசிய பிரேமலதா